உணர்வுகளை தூண்டும் பரபரப்பான அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றுகிறார்கள்! சுதர்ஷினி

உணர்வுகளை தூண்டும் பரபரப்பான அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றுகிறார்கள்! சுதர்ஷினி


கொரோனாவை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு பாணி மருந்துகள் மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என கொரோனா கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


ஆங்கில மருத்துவ விஞ்ஞானத்தில் எந்த மருந்தும் பதிவு செய்யப்படாமல் பயன்படுத்த முடியாது.


முதலில் பரிசோதனை நடத்தி மருந்து வெற்றியளிக்குமா என்பதை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும்.


$ads={2}


தேசிய மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் குணப்படுத்தும் முறை இருக்கின்றது. அது சம்பந்தமான மருந்துகளை ஆயுர்வேத வைத்திய சபையில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நோயாளிகளின் உயிரை பாதுகாக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சுக்கு இருக்கின்றது.


உணர்வுகளை தூண்டும் பரப்பரப்பான அறிக்கை மூலம் மக்கள் ஏமாறுவார்கள். அவ்வாறான நிலைமை என்ன செய்வது என்று மக்களுக்கு புரியாது.


பொய்யான நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் விதைக்கும் போது, அவர்கள் வீதிகளுக்கு செல்வார்கள். இதன் மூலம் கொரோனா தடுப்பின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பை கவனத்தில் கொள்ளமாட்டார்கள். இதன் காரணமாக அவர்கள் ஆபத்துக்கு உள்ளாக கூடும்.


கேகாலை தம்மிக்க பண்டார எவ்வாறான பின்னணியை கொண்ட நபர் என்பது மக்களுக்கு தெரியும். இப்படியானவற்றை செய்வது சட்டவிரோதமானது. கொரோனாவை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதோ மக்களை ஏமாற்றுவதோ பெரிய பாவம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post