முரளிதரனின் சாதனையை முறியடித்த இந்திய வீரர் அஷ்வின்!

முரளிதரனின் சாதனையை முறியடித்த இந்திய வீரர் அஷ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை முறியடித்துள்ளார்.

73 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இதுவரை 192 தடவைகள், இடது கை துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றி இந்த புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.


$ads={2}

முத்தையா முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 191 தடவைகள், இடது கை துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியிருந்த நிலையில, ரவிச்சந்திரன் அஷ்வின் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 375 விக்கெட்களை அஷ்வின் வீழ்த்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக போட்டியிலேயே அஷ்வின் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post