சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை! -எம்.எச்.ஏ. ஹலீம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை! -எம்.எச்.ஏ. ஹலீம்


முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு தொழில்நுட்ப குழு அனுமதிவழங்குமென்ற நம்பிக்கை எமக்கில்லை. அதனால் அரசாங்கம் முஸ்லிம்களின் கலாசாரத்துக்கு மதிப்பளித்து சாதகமான முடிவொன்றை எடுக்கமென நம்புகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் இன்று (30) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் நூறு பேரை கடந்துள்ளது. கொரோனா ஒழிப்புக்காக சுகாதாரத்துறையினரும் பாதுகாப்பு படையினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.


மேலும் கொரோனா காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.


$ads={2}


தொழில்நுட்ப குழுவின் அறிவிப்பு கிடைக்கும்வரை காத்திருப்பதாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் கூறுகிறது. தொழில்நுட்ப குழு மாறுபட்ட நிலைபாட்டை கொண்டிருப்பதால் அக்குழுவின் ஊடாக தீர்வு கிடைக்கும் என்ற எமக்கு நம்பிக்கையில்லை என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.