மத்திய மாகாணத்தில் தீவிரமடையும் கொரோனா - மக்கள் அவதானத்துடன் செயல்படவும்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய மாகாணத்தில் தீவிரமடையும் கொரோனா - மக்கள் அவதானத்துடன் செயல்படவும்

மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்துள்ளதுடன். ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய மாகாண மட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர், அதன்படி கண்டி மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. அதுபோன்று நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 121 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 52 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக பேராதனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயது நபருக்கு மேற்கொண்ட பி,சீ,ஆர் பரி​சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தமை நேற்று (30) தெரியவந்துள்ளது.


$ads={2}

இந்நிலையில் கண்டி நகரம் மற்றும் அக்குறணை பகுதிகளை சேர்ந்த மொத்தம் 45 பாடசாலைகள் எதிர்வரும் 07ஆம் திகதி வரை மத்தியமாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவரின் பணிப்புரையின் பேரில் மூடப்பட்டுள்ளதாக மத்தியமாகாண ஆளுநரின் காரியாலய செய்திகள் அறிவிக்கின்றன.

கண்டி தேசிய வைத்திய சாலையின் தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சை பிரிவுகளை விரைவாக திறக்க முடியும் என கண்டி தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் இரேஷா பெர்ணாந்து நேற்று (30) தெரிவித்தார்.

இதேவேளை கண்டி தேசிய வைத்திய சாலையின் தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சை பிரிவுகளில் உள்ள மருத்துவர் ஒருவருக்கும் அப்பிரிவுகளில் உள்ள ஒன்பது தாதிகள் உள்ளிட்ட 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து மேற்படி பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

மேலும் இதன் காரணமாக வைத்தியசாலையின் ஏனைய ஊழியர்கள் குழு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பரிந்துரைசெய்யப்பட்டிருந்தனர். அதன்படி அவர்களில் எவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து , தொண்டை, காது மற்றும் மூக்கு பிரிவுகளின் மருத்துவப் பணிகளை விரைவில் தொடங்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளின் மருத்துவப்பணிகள் வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் நோயாளிகளைப் பார்க்க ஒரு நபருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கண்டி வைத்தியசாலை பணியாளர்கள். குழுவினர் மற்றும் அவர்களது நெருங்கியவர்கள் தெல்தெனிய மற்றும் பொல்கொல்லை பிரதேசங்களிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.