
இதற்கமைய காலி மாவட்டத்தில் 438 பேருக்கும் மாத்தறை மாவட்டத்தில் 266பேருக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 67பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
$ads={2}
காலியில் 6 பேருக்கும் ஹம்பாந்தோட்டையில் 5பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாத்தறை மாவட்டத்தில் புதிய தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.
இதேவேளை தெற்கு மாகாணத்தில் 266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். காலியில் இருந்து 167 பேரும், மாத்தறையில் இருந்து 72பேரும் ஹம்பாந்தோட்டையைச் சேரந்த 27 பேரும் இவ்வாறு தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.