புதிய வைரஸுக்கு எதிராக 6 வாரங்களுக்குள் தடுப்பு மருந்து தயாரிக்கலாம்; பயோஅன்ட்டெக் இணை ஸ்தாபகர் தெரிவிப்பு!

புதிய வைரஸுக்கு எதிராக 6 வாரங்களுக்குள் தடுப்பு மருந்து தயாரிக்கலாம்; பயோஅன்ட்டெக் இணை ஸ்தாபகர் தெரிவிப்பு!

Ugur_Sahin_BioNTech

தான் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தானது, பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராகவும் செயற்படுவற்கு அதிக வாய்ப்புள்ளதாக ஜேர்மனியின் பயோஅன்ட்டெக் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் உகுர் சாஹின் தெரிவித்துள்ளார்.


எனினும், தேவையானால் புதிய வைரஸுக்கு ஏற்ற தடுப்பு மருந்தை 6 வாரங்களுக்குள் தயாரிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.


"விஞ்ஞானபூர்வமாக, இந்த தடுப்பு மருந்தினால் அளிக்கப்படும் நீர்ப்பீடனமானது புதிய வகை வைரஸுடனும் எதிர்வினையாற்றக் கூடியது.


$ads={2}


ஆனால், திரிபடைந்த இந்த புதிய வைரஸை முற்றிலும் பிரதிபலிக்கக்கூடிய தடுப்பு மருந்து தயாரிப்பையும் மெசேன்ஜர் தொழில்நுட்பம் மூலம் எம்மால் நேரடியாக ஆரம்பிக்க முடியும்.


தொழில்நுட்ப ரீதியாக 6வாரங்களுக்குள் இத்தடுப்பு மருந்தை எம்மால் வழங்க முடியும்” என டாக்டர் உகுர் சாஹின் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.


பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸானது 9 தடவைகள் மாற்றமடைந்துள்ளது என உகுர் சாஹின் கூறினார்.


எனினும், அமெரிக்காவின் பைஸர் நிறுவனத்துடன் இணைந்து பயோஅன்ட்டெக் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தானது வினைத்திறனுடன் தொழிற்படும் என டாக்டர் உகுர் சாஹின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ஏனெனில், இத்தடுப்பு மருந்தானது ஆயிரத்துக்கும் அதிகமான அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் 9 மாத்திரமே மாற்றடைந்துள்ளன. அதாவது, இத்தடுப்பு மருந்தில் 99 சதவீத புரதம் அப்படியே உள்ளது" என டாக்டர் உகுர் சாஹின் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post