தனிமைப்படுத்தலின் இருக்கும் 12 பேர் விடுதலை கோரி உண்ணாவிரத போராட்டம்!

தனிமைப்படுத்தலின் இருக்கும் 12 பேர் விடுதலை கோரி உண்ணாவிரத போராட்டம்!


மாத்தறை - நில்வளா தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள 12 பேர் நேற்று (30) இரவு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த டிசம்பர் 2ஆம் திகதி 276 இலங்கையர்கள் நாடு திரும்பிய நிலையில் அவர்கள் நில்வளா தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்கப்பட்டனர்.


$ads={2}


இவர்களில் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்களுடன் நெருக்கமாக இருந்த பலரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.


மேற்படி 12 பேரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியவர்கள் ஒரே இடத்தில் பல வசதிகளைப் பயன்படுத்தியிருப்பதால் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.


எனினும் தற்போதுவரை 30 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற தங்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியே இவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post