மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தினை அடுத்து காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக ராகம வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று வரை அனுமதிக்கப்பட்ட 71 கைதிகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டிருந்தது.
தொடர்ந்தும் ஏனைய கைதிகளுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.