சுகாதார அமைச்சின் பேச்சாளர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம்!

சுகாதார அமைச்சின் பேச்சாளர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம்!

jayaruwan-bandara yazhnews

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளராக கடந்த 2 மாதங்களாக செயலாற்றிய மருத்துவர் ஜயருவன் பண்டார பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இன்று (14) முதல் அவர் நீக்கப்பட்டதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


வைத்தியர் பண்டார மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக கடமையாற்றிய நிலையில் அங்கிருந்தும் நீக்கப்பட்டு, பின்னர் MRIயின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.


$ads={2}


பின்னர் அவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவரை சுகாதார அமைச்சர் இன்று முதல் ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதற்கான சரியான கரணம் தொடர்பிலான செய்திகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை .


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post