கொரோனா போக்குவரத்து கொள்கை ஒன்றை வௌியிட தீர்மானம்!

கொரோனா போக்குவரத்து கொள்கை ஒன்றை வௌியிட தீர்மானம்!


மேல் மாகாணத்தில் நாளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா போக்குவரத்து கொள்கை ஒன்றை வௌியிட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,


புதிய போக்குவரத்து கொள்கையானது நாளை (09) அல்லது நாளை மறுதினம் அறிமுகப்படுத்தப்படும்.


இராணுவத் தளபதி மற்றும் சுகாதாரத் துறைக்கு நாங்கள் மூன்று போக்குவரத்து நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.


கொரோனா நிபந்தனைகளின் கீழ் பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டு செல்வது என்பது குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


$ads={2}


சாதாரண நடைமுறையில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுமாயின் அதாவது ஆசனங்களில் அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் பயணிப்பதாயின் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.


ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அச்சுறுத்தல் இருப்பதாக சுகாதாரத் துறை எங்களுக்கு தெரிவித்தால் ஒரு இருக்கைக்கு ஒரு பயணியை மட்டுமே ஒதுக்குவது மூன்றாவது முறை.


ஒரு ஆசனத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் பயணிப்பதாயின் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.