அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!


அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சற்றுமுன்னர் வெளியானது.


அதன்படி, 


வெள்ளை/சிவப்பு சம்பா (வேகவைத்து/அவித்து பெறப்பட்டது) (சீரக சம்பா தவிர்த்து) ரூ. 94 எனவும்,


வெள்ளை/சிவப்பு பச்சை சம்பா ரூ. 94 ஆகவும், 


வெள்ளை/சிவப்பு நாடு (வேகவைத்து/அவித்து பெறப்பட்டது) (மொட்டைக் கருப்பன் மற்றும் ஆட்டக்காரி தவிர்ந்த) ரூ. 92 ஆகவும்,


வெள்ளை/சிவப்பு பச்சை அரிசி  ரூ . 89  எனவும் விற்பனை செய்யப்படல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இவ்வர்த்தமானி அறிவித்தல் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கட்டளைப்படி இன்று (04) முதல் அமுலுக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.யாழ் நியூஸ்


$ads={2}


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.