சற்றுமுன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்; நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பு! (முழு விபரம்)

சற்றுமுன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்; நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பு! (முழு விபரம்)

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அலுவல்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முறை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (09) அதிகாலை நீக்கப்பட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது தெரிவிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு,

01. மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (09) அதிகாலை 5.00 மணிக்கு நிறைவடைகின்ற போதிலும் 25 இலங்கை பொலிஸ் வலயங்கள் மற்றும் குருநாகல் மாநகர சபை பிரதேசமும், பாணந்துறை பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் பிரதேசமும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருப்போர் அல்லது அதிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது வெளியில் இருப்பவர்களுக்கு இந்த பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

இந்தப் பிரதேசத்தில் உள்ள தொழில் மற்றும் ஏனைய பணிகளில் ஈடுபடுவோருக்கும் இங்கிருந்து வெளியேறுவதற்கு முடியாது.

விசேடமாக சுகாதரப் பிரிவு அறிவித்துள்ளதற்கு அமைவாக இவை தனிமைப்படுத்தப்பட்ட ஆபத்தான பிரதேசங்கள் என்பதாகும். இதற்கமைவாக இந்தப் பிரதேசங்களில் இருந்து எவரேனும் வருகைத் தந்தால் அவர் அந்த நிறுவனங்களுக்கு கிருமிகளைக் கொண்டு வரக்கூடும். இதனால் இந்தப் பரிதேசத்தில் உள்ள ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் அனைத்து நிறவனங்களுக்கும் அறிவித்துக்கொள்கின்றோம்.

இந்த வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் ஊடாக செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படாமல் செலுத்தப்பட வெண்டும். இதற்கமைவாக, இந்தப் பிரதேசங்களில் பயணிகளை இறக்குதல் அல்லது அழைத்துச் செல்லல் முதலானவற்றை மேற்கொள்ள முடியாது. இதேபோன்று வாகனங்களை நிறுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதுடன் இந்த விதிமுறை அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கும் பொதுவானதாகும்.

இந்தப் பிரதேசங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் இருதய நோயாளர்கள் நோய்களுக்காக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வோர் அவசர கிசிக்சைக்காக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாது அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியும்.

வேறு எந்த காரணத்தைக் கொண்டும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளியே செல்வதற்கும் அல்லது வெளியார் உட்பிரவேசிப்பதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

02. இந்தப் பிரதேசங்களில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக DELIVERY சேவைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் உணவுவ் மருந்து மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றிற்கு இந்த பிரதேசத்திற்குள் டெலிவரி சேவைகளாக செயற்பட முடியும். இருப்பினும் வர்த்தக நிலையங்களை திறக்க முடியாது.

இந்த பிரதேசங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வேலைத்திட்டமொன்று வகுக்கப்படும். விசேடமாக கொழும்பு வடக்கு மற்றும் மத்திய பிரதேசத்தில் 5 மாடி வீடமைப்புத் தொகுதிகள் முழுமையாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் உள்ளவர்கள் இதிலிருந்து வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளதுடன்ரூபவ் இவர்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து வகைகளை விநியோகிப்பதற்கு DELIVERY சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்தப் பிரதேசங்களில் அல்லது நாட்டின் ஏனைய இடங்களில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அவசியம் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். இவர்கள் இருக்கும் இந்த இடங்களிருந்து வெளியே செல்வது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் குற்றமாவதுடன் சம்பந்தப்பட்ட சட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

$ads={2}

இன்று மேல் மாகாணத்திற்கு வரும் மற்றும் வெளியேறும் அதிவேக வீதி மற்றும் வேறு நுழைவாயில்கள் திறக்கப்படும். இந்த இடங்களில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதன்போது தனிமைப்படுத்தல் பிரதேசங்களைத் தவிர ஏனைய பிரதேசங்களில் போக்குவரத்துக்கள் இடம்பெற்ற போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயண வரையறையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் நிறுவனங்களை திறப்பது தொடர்பில் எடுத்துக் கொண்டால் 2020 அக்டோபர் மாதம் 15ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட சட்ட விதிகள் தொடர்பில் அவசியம் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.

இதில் நீங்கள் 07 விடயங்களை பூரணப்படுத்துவது கட்டாயமாகும்.

1. அலுவலகமொன்றை, வர்த்தக நிலையமொன்றைத் திறக்கும் பொழுது நீங்கள் அடங்கலாக வருகை தருவோர் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

2. கைகளை கழுவுவதற்கான இடமொன்று இருக்க வேண்டும். முகக் கவசம் அணிந்திருத்தல், உடல்
வெப்பத்தை பரிசோதிப்பதற்கான நடைமுறையொன்றும் வருகைத் தருவோரின் ஆவணப்பட்டிலொன்று முதலானவற்றை மேற்கொள்ள வேண்டும்.

3. இவை முதலானவற்றை செய்யும் பொழுது சமூக இடைவெளியைப் பாதுகாக்க வேண்டும்.

4. இந்த பொதுவான நடைமுறைகளுக்கு மேலதிகமாக 55 விசேட நிறுவனங்களுக்காக தனித்தனியான ரீதியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விடயங்கள் சுகாதார அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

5. அத்தோடு இந்த நிறுவனங்கள் இவற்றுக்கு அமைவாக செயற்பட வேண்டும். அனைத்து அலுவலகங்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளும் இந்த அனைத்திற்கும் உட்பட்ட வகையில் செயற்படுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

6. இவ்வாறு மேற்கொள்ளாதப்படாத பட்சத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு எதிராக செயற்பட்டதாகக் கருதி இவ்வாறானோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டி ஏற்படும்.

7. நீங்கள் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது தனிமைப்படுத்தபடாத எந்தப் பிரதேசத்தில் இருந்தாலும் அனைத்து பிரஜைகளும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி முதலானவை அவசியம் கடைபிடிக்க வேண்டிய விடயங்களாகும்.

இதற்கு முரண்பட்ட வகையில் எவரும் செயற்பட்டால் அவ்வாறானோர் கைது செய்யப்படுவர். இன்று வரையில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.

$ads={2}

இலங்கையில் எத்தகைய பிரதேசத்திலும் விருந்து வைபவம், பொதுமக்கள் ஒன்றுகூடும் விளையாட்டு முதலானவை நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

விசேடமாக நிறுவனங்களை முன்னெடுக்கும் அனைவரும் சுகாதார அமைச்சின் இணையதளத்திற்குள் பிரவேசித்து அதற்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அடிக்கடி பொலிஸ் நடமாடும் சேவை இடம்பெறுவதுடன் சிவில் உடையில் பொலிஸார் நாளைய தினம் தொடக்கம் நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுவர்.

03. தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்திற்குள் யாராவது பிரவேசித்தால் அல்லது அங்கிருந்து வெளியேறினால் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அதன்பின்னர் குற்றவியல் சட்டத்தின் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழ் நோயை வேண்டுமென்றே பரப்புவோராயின் அது தண்டனைக்குரியதாகும்.

விசேடமாக அந்தந்த நிறுவனங்களுக்கு வருகை தருவோர் தொடர்பான பட்டியலை மேற்கொள்ளும் பொழுது அந்த ஆவணத்திற்கு உண்மைக்குப் புறம்பான தகவல்கள் உள்ளடக்கப்படுவதாகவும் பெற்றுக்கொள்ளப்படும் அனுமதிப் பத்திரத்தில் மாற்றத்தை மேற்கொண்டு போலி அனுமதி பத்திரம் தயாரிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. யாரேனும் ஒருவர் இந்த தவறான தகவல்களை ஆவணத்திற்குள் உள்ளடக்கினால் அவர் மோசடியான ஆவணம் தயாரித்தவர் ஆவதுடன் ஏமாற்றவதற்காக மோசடி ஆவணம் தயாரித்தமைக்காக ஏழு வருட கடூழிய சிறை தண்டனை கிடைக்கக்கூடிய குற்றமாகும்.

இதேபோன்று யாரேனும் ஒருவர் தமது அடையாள அட்டை இலக்கத்திற்காக வேறு ஒருவரின் தகவல்களை உள்ளடக்குவாராயின் அவ்வாறானவர் 3 வருட காலத்திற்கு சிறைத் தண்டனைக்கு உட்படுத்தக் கூடிய தவறிழைத்தவர் ஆவார்.

இதனால் உங்களது நிறுவனங்களுக்கு பிவேசிக்கும் அல்லது சேவைகளை பெற்றுக் கொள்ளும் பொழுது தவறான தகவல்களை உள்ளடக்கக்கூடாது. வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட தனிமைப்படுத்தல் விதிகள் அந்த வகையிலேயே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது எமது நோக்கமாகும்.

இதில் பொதுமக்களுள் சிலரினால் மாத்திரம் இந்த சட்ட விதிகள் மீறப்படுவதுடன் அவ்வாறானோருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவது தொடர்பாக இதுவரையில் 2,850 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு சுமார் 430 வாகனங்கள் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post