ஹொரவ்பொத்தான, நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயம் வரலாற்று சாதனை!!

ஹொரவ்பொத்தான, நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயம் வரலாற்று சாதனை!!

2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(15) வெளியானது.


இதற்கமைய ஹொரவ்பொத்தான நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயம் இம்முறை வரலாற்றில் முதல் தடவையாக அதி கூடிய மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு(158) மேல் புள்ளிகளை பெற்று வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் A.B மஹ்ரூப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

$ads={2}


பரீட்சைக்கு தோற்றிய 26 மாணவர்களில் 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு(158) மேல் புள்ளிகளை பெற்றே இவ் வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளதோடு அந்த 8 மாணவர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.

59 வருட பாடசாலை வரலாற்றை சாதனையாள் புரட்டிப் போட்ட மாணவ சொல்வங்களை அன்றிலிருந்து முழு மூச்சுடன் இரவு பகல் பாராது வளப்படுத்திய வகுப்பாசிரியை H.M நிஷா ஆசிரியரையும் பாடசாலையின் அதிபர் ஜனாப் A.B மஹ்ரூப் அவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

யாழ் நியூஸ் செய்தியாளர் முஹம்மட் ஹாசில்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post