தேசிய ஆவணக் காப்பக திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

தேசிய ஆவணக் காப்பக திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

தேசிய ஆவணக் காப்பக திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்கூட்டியே அதற்கான நேரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆவணக் காப்பக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 0112 696 917 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

அத்துடன், தேசிய ஆவணக் காப்பக திணைக்களத்தின் கண்டியிலுள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ள 081 22 97 29 என்ற இலக்கத்தை அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை பதிவு செய்வதற்கும், அச்சகங்களை பதிவு செய்வதற்கும் மற்றுமொரு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 0112 694 523 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு  தேசிய ஆவணக் காப்பக திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post