நாளை பாடசாலைகள் மீள் திறக்கப்பட்டதும் ஒரு வாரத்திற்கு கண்காணிக்கப்படும்! கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

நாளை பாடசாலைகள் மீள் திறக்கப்பட்டதும் ஒரு வாரத்திற்கு கண்காணிக்கப்படும்! கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!


நாட்டில் ஏராளமான பகுதிகளில் நாளை (23) பாடசாலைகள் மீள் திறக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்கு கண்காணிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.


ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


6 முதல் 13 ஆம் வகுப்பு வரையான தரங்களுக்கு நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் மீள் திறக்கப்படும் என சமீபத்தில் கல்வி அமைச்சினால் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மேல் மாகாணத்திலும் உள்ள பாடசாலைகளுக்கு இந்த முடிவு பொருந்தாது.


அதன்படி, நாடளாவிய ரீதியில் 5,637 பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக நாளை மீண்டும் திறக்கப்படும்.


$ads={2}


பாடசாலைகளிலிருந்து கொரோனா தொற்று பரவும் நிலைக்கு தள்ளப்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் நிச்சயமாக நான் அரசாங்கத்தின் சார்பாக ஏற்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.


மேலும், வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், கிழக்கு மாகாண இயக்குநர் தெரிவிக்கையில், 5 பாடசாலைகள் தவிர்த்து ஏனைய அனைத்து பாடசாலைகளும் மீள் திறக்க தயாராக உள்ளன.


இந்நிலையில், மேல் மாகாணத்திலும் பாடசாலைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், ஆளுநரின் கூற்றின்படி, சில பிரச்சினைகள் காரணமாக அங்கு சில பாடசாலைகள் மீள் திறக்க முடியவில்லை என வடமேற்கு மாகாண இயக்குனர் தெரிவித்தார்.


மேலும் சபரகமுவ மாகாணம் மேல் மாகாணத்தின் எல்லையாக இருப்பதால் அந்த மாகாணத்திலும் பல பிரச்சினைகள் உள்ளதாக அந்த மாகாணத்தின் இயக்குனர் சுட்டிக்காட்டினார்.


அது தவிர, மத்திய மாகாணம், வட மத்திய மாகாணம், தென் மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் முழுமையாக நிலையில் தயாராக உள்ளது என தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post