கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் சுகாதார ஆலோசனைக்கு அமைய மாத்திரமே முன்னெடுக்க வேண்டும்! நாரம்பனாவ ஆனந்த தேரர்

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் சுகாதார ஆலோசனைக்கு அமைய மாத்திரமே முன்னெடுக்க வேண்டும்! நாரம்பனாவ ஆனந்த தேரர்

narampanawa ananda thero

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களின் இறுதிக்கிரியைகள் சுகாதார ஆலோசனைகளுக்கமைய மாத்திரமே முன்னெடுக்கப்பட வேண்டும் என அஸ்கிரி பீடத்தின் பிரதி பதிவாளர் நாரம்பனாவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் இனம், மத அடிப்படையில் முன்னெடுக்கப்படக் கூடாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது கொரோனாவால் இறப்பவர்களின் இறுதிக்கிரியைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து நாட்டில் நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளது.


$ads={2}


இந்த தொற்று இனம், மதம் பாராமல் அனைவருக்கும் தொற்றுகின்றது. எனவே இவ்வாறான பின்னணியில், இறப்பவர்களை புதைப்பதா எரிப்பதா  என சுகாதார அதிகாரிகளின் தீர்மானத்துக்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும்.


குறைந்தது பௌத்தர்கள் என்ற ரீதியில் எமது மத அனுஸ்டானங்களை செய்ய கூட முடியாமல் உள்ளது. ஆனால் இந்த நிலை எங்களுக்கு நன்கு புரியும்.


எனவே இப்போதைய சூழ்நிலையில், இனவாத, மதவாதிகளின் சில அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாமல், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயற்படுவது சிறந்தது என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post