இலங்கை வரலாற்றில் முதன் முதலாக பாராளுமன்ற அமர்வில் நடந்த விடயம்!

இலங்கை வரலாற்றில் முதன் முதலாக பாராளுமன்ற அமர்வில் நடந்த விடயம்!

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக மூன்று ஜனாதிபதிகள், ஆளும் கட்சியின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று நடைபெற்ற போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சபைக்கு பிரசன்னமாகியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு அருகிலுள்ள ஆசனத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமர்ந்திருந்தார்.


$ads={2}

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்வரிசையிலுள்ள தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்திருந்ததுடன், மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.

2019ஆம் ஆண்டு முதல் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.

இந்த நிலையில், மூன்று ஜனாதிபதிகளும் பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் கலந்துக்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post