கேகாலை மாவட்டம் பேராபத்தில் - ஊரடங்கு பிறப்பிக்க கோரிக்கை

கேகாலை மாவட்டம் பேராபத்தில் - ஊரடங்கு பிறப்பிக்க கோரிக்கை

கேகாலை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகும் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் இதுவரை 104 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்தார்.


$ads={2}

மாவனல்லை பிரதேச செயலகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையாக 26 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலகத்திலிருந்து 14 தொற்றாளர்கள், கேகாலை பிரதேச செயலகத்திலிருந்து 15 மற்றும் தெஹிஓவிட்ட பிரதேச செயலகத்திலிருந்து 12 தொற்றாளர்கள் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.

நிலைமை சற்று தீவிரம் அடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பிரதேச சபைகளின் தலைவர்களிடமிருந்து எங்களுக்கு கோரிக்கை வந்தது.

இது தொடர்பாக தேசிய குழு மற்றும் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையான முடிவுகள் மிக உயர்ந்த மட்டத்தில் எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.

கம்பஹா மாவட்டத்திலிருந்து இப்பகுதிக்குள் நுழைவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரை நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

அனைத்து ரிசார்ட்ஸ் மற்றும் லாட்ஜ்களையும் மூட மாவட்டக் குழு முடிவு செய்தது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் பெரும்பாலான தொற்றாளர்கள் பதிவான பகுதிகளில் வார சந்தைகளையும் மூட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.