கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியை முடக்க வேண்டும்! ரோஸி சேனாநாயக்க தெரிவிப்பு!

கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியை முடக்க வேண்டும்! ரோஸி சேனாநாயக்க தெரிவிப்பு!


கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியை முடக்க வேண்டுமென மாநகர சபையின் மேயர் ரோஸி சேனாநாயக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.


கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு குறைந்தபட்சம் மூன்று வார காலத்திற்கேனும் முடக்கல் உத்தரவு அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றுடன் வாழ்வது என்பது இரண்டாம் அலையுடன் வாழ்வதாக அர்த்தப்படாது, கொரோனாவுடன் வாழ வேண்டுமாயின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.


கொழும்பிற்குள் பிரவேசிப்பது முழுமையாக தடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் பாரிய அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}


கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிகளவான வயது முதிர்ந்தவர்கள் இருக்கின்றார்கள் எனவும், அவர்களை காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


14 முதல் 21 நாட்களுக்கு முடக்கல் நிலையை அறிவித்து அதன் ஊடாகவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post