கொரோனா தொற்றும் என்ற பயத்தால் நபரொருவர் தற்கொலை!

கொரோனா தொற்றும் என்ற பயத்தால் நபரொருவர் தற்கொலை!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் அச்சத்தில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


$ads={2}

நாகொட வைத்தியசாலை ஊழியர்களை அழைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை தனியார் பேருந்தின் சாரதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

நேற்று அதிகாலை தனது வீட்டிற்கு முன்னால் உள்ள மரத்தில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துள்ளார்.

கொடஉடஹேன, யட்டியன, அகலவத்தை பிரதேசத்தை பீ.வீ.சரதியல் என்ற 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேருந்துகளின் சாரதிகளுக்கு கொரோனா ஏற்படுவதனால் அச்சத்தில் இந்த நபர் இருந்தார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் பணியாற்றும் பேருந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது முதல் அவர் அச்சத்தில் இருந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழக்க நேரிடும் என்ற அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post