ஒரே நாளில் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்!!

ஒரே நாளில் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்!!


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி ஒரே நாளில் உலக அளவில் பிரபல்யம் அடைந்துள்ளார்.


ஊடகவியலாளர் சந்திப்பின் போது நேற்றைய தினம் பச்சை மீனை கடித்து சாப்பிட்ட காணொளி உலகின் பல்வேறு பிரபல்யமான ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.


கொரோனா தொற்று காரணமாக மீன் விற்பனை ஸ்தம்பிதம் அடைந்துள்ள காரணத்தினால் மீன் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு சமைக்காத மீனை உட்கொண்டிருந்தார்.


கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மீன் விற்பனையை ஊக்குவிப்பதற்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பச்சை மீனை உட்கொண்டார் என ரொய்டர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.


டெலிகிராப், நியூஸ்18, நியூஸ்டியூப், ஸ்கைநியூஸ், தி கார்டியன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி, ஊடகவியலாளர் சந்திப்பில் பச்சைமீனை சாப்பிட்ட விவகாரம் குறித்த செய்திகளும், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post