டயானாவை கட்சியிலிருந்து வெளியேற்றிய சஜித்!

டயானாவை கட்சியிலிருந்து வெளியேற்றிய சஜித்!


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவை கட்சியிலிருந்து விலக்குவதற்கு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த டயானா கமகே தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு நிறைவேற்று குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.


இதையடுத்தே டயானா கமகேவை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.


$ads={2}


20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஏனைய 07 பேர் தொடர்பிலான தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அந்தந்த கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


கட்சிகளின் தலைவர்கள் தமது தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவிற்கு விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post