தேசிய போக்குவரத்து ஆணையத்தின் மக்களுக்கான அதிரடி தகவல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் மக்களுக்கான அதிரடி தகவல்!

அரசாங்கத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்துக் கொள்கையின் விதிகளின்படி செயற்படாத பஸ்கள் குறித்து ஆராய சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

அதன்படி, பஸ்களின் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள், டிக்கெட் வழங்காத பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனைத்து அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

இதற்கிடையில், இது போன்ற தவறுகளைக் கண்டவுடன் 1955 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு குறித்த பஸ் இலக்கங்களைக் குறிப்பிட்டு பொதுமக்கள் புகார் செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post