திருகொணமலை - அன்புவெளிபுரத்தில் தாக்குதல்; 5 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம்!

திருகொணமலை - அன்புவெளிபுரத்தில் தாக்குதல்; 5 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம்!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அன்புவெளிபுரம் பிரதேசத்தில் நால்வர் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்தச் சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.

தமது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞர்  ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட தாக்குதலையடுத்து தாக்குதலுக்கு உள்ளானவரின் உறவினர் நியாயம் கேட்ட நிலையில், தாக்குதல் மேற்கொண்ட இருவர் மேலும் இருவருடன் வீடுபுகுந்து வாள் மற்றும் தடகளால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

$ads={2}

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் குறித்த தாக்குதலினால் 39 வயது மற்றும் 65 வயது பெண்கள் இருவர் உட்பட ஐந்து சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியதுடன் ஆண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

தாக்குதல் நடத்திய நால்வரை உப்புவெளி பொலிஸார் தேடி வருவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post