1960ஆம் ஆண்டுகளிலேயே அடையாளம் காணப்பட்ட கொரொனா வைரஸ்? கொழும்பு வைத்திய பரிசோதனை நிறுவனம் தகவல!

1960ஆம் ஆண்டுகளிலேயே அடையாளம் காணப்பட்ட கொரொனா வைரஸ்? கொழும்பு வைத்திய பரிசோதனை நிறுவனம் தகவல!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 1960ஆம் ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கொழும்பு வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் வைத்திய ஆய்வக வித்தியாலயத்தின் பாடசாலை பிரிவு பிரதானி ஜானகி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக கலந்துரையாடலில் இணைந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1960ஆம் ஆண்டு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு முறையில் வளர்ந்து தொற்று நோயாக வளர்ச்சியடைந்துள்ளது.

$ads={2}

இந்த வைரஸ் பிரச்சினையை முடிந்தளவு எங்களால் தீர்க்க முடியும். இது ஒரே நேரத்தில் உலகளவில் ஏற்பட்ட வைரஸ் என பலர் கூறுகின்றனர்.

இந்த வைரஸ் முதல் முறையாக 1960ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு சீனாவின் ஒரு பகுதியில் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டார். அதனை சார்ஸ் வைரஸ் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சார்ஸ் வைரஸ் 22 நாடுகளுக்கு பரவி சென்றது. பின்னர் 2012ஆம் ஆண்டு சவூதியில் வேறு முறையில் இந்த வைரஸ் பரவல் ஏற்பட்டது. அந்த வைரஸ் 24 நாடுகளுக்கு பரவியது.

2015ஆம் டிசம்பர் முதலாம் திகதி மீண்டும் சீனாவில் இருந்து சார்ஸ் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அந்த வைரஸ் மாற்றம் பெற்று 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றாக மாற்றமடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் சில நாடுகளில் நிரந்தரமாக தங்கி விடுவதற்கான ஆபத்துக்களும் உள்ளதென ஜானகி சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post