கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை பார்வையிட சென்ற நபருக்கு கொரோனா உறுதி!!

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை பார்வையிட சென்ற நபருக்கு கொரோனா உறுதி!!


கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை பார்வையிட சென்ற நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

குறிற்ற நபர் செப்டம்பர் 23 ஆம் திகதி புத்தக கண்காட்சியை பார்வையிட்டதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம்தெரிவித்துள்ளது.


$ads={2}

அந்த நபர் அதே நாளில் கோட்டையில் உள்ள கொழும்பு பஸ் தரிப்பிடத்திற்கு பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் செப்டம்பர் 30 ஆம் திகதி நுவரெலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

நோயாளி சிலாபத்தொல் வசிக்கும் 36 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கொரோனா வைரசுக்கு இலக்காகியுள்ளதாககண்டறியப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post