ஊரடங்கு பயண அனுமதிப்பத்திரம் தொடர்பான விசேட அறிவித்தல்!

ஊரடங்கு பயண அனுமதிப்பத்திரம் தொடர்பான விசேட அறிவித்தல்!


மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களில் ஊரடங்கு காலத்தில் பயணிப்பதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ள உரிய பொலிஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை பிரதேசத்தில் ஊரடங்கு அனுமதிப் பத்திரம் தேவைப்படுவோர், மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சீ.பீரிஸ் உடன் 0718591617 எனும் இலக்கத்தில் தொடர்பை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திவுலபிட்டிய பிரதேசத்தில் ஊரடங்கு அனுமதிப் பத்திரம் தேவைப்படுவோர், திவுலபிட்டிய பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். கொட்டஹச்சி உடன் 0718591628 எனும் இலக்கத்தில் தொடர்பை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post