நவம்பரில் கொரோனா தடுப்பூசி - இங்கிலாந்து

நவம்பரில் கொரோனா தடுப்பூசி - இங்கிலாந்து

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுப்பு நவம்பர் முதல் வாரத்தில் இங்கிலாந்தின் பிரபல வைத்தியசாலை ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


$ads={2}

இங்கிலாந்தின் பிரபல செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள தவலுக்கு அமைவாக இச் செய்தி வெளியடப்பட்டுள்ளது.

"நவம்பர் 2 ஆம் திகதி தொடங்கும் வாரத்திலிருந்து" தடுப்பூசிக்குத் தயாராக இருக்கும் படி குறித்த வைத்தியசாலைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தி நாளிதழ் மேலும் தெரிவி்த்துள்ளது.

உலகில் உள்ள ஒவ்வொருவரது எதிர்ப்பார்ப்பும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மீது இருக்கும் நிலையில் ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னிலையில் உள்ளன.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியானது கொரேனாவினால் அதிக ஆபத்தில் உள்ள இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் தடுப்பூசி கண்டுபிடிப்பின் விபரங்கள் விரைவில் ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி குறித்து ஜூலைமாதம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது 18 முதல் 55 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமானவர்களிடையே "வலுவான நோயெதிர்ப்பு சக்தியை" உருவாக்கியுள்ளதாக தடுப்பூசியை உருவாக்கியுள்ள குழு தெரிவித்துள்ளது.

ஆனால் தடுப்பூசி இறுதியில் வயதானவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதை நேர்மறையான நோயெதிர்ப்புத் திறன் சோதனைகள் மட்டும் உத்தரவாதம் அளிக்காது என்று FT எச்சரித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post