திரையரங்குகள், இரவு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.