இஸ்லாமியர்கள் மீதுள்ள அனைத்து தடையையும் நீக்குவேன்! அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி வேட்பாளர் பகிரங்க அறிவிப்பு!

இஸ்லாமியர்கள் மீதுள்ள அனைத்து தடையையும் நீக்குவேன்! அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி வேட்பாளர் பகிரங்க அறிவிப்பு!


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், இஸ்லாமியர்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் ஏற்கனவே அதிபராக இருக்கும், டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.


இதனால் இரண்டு பேரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


$ads={2}


இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது  ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன், அதிபராக உங்கள் பங்களிப்புக்கு மதிப்பளிப்பேன்.


மேலும், சமூகத்தில் நிலவும் விஷத்தை நீக்குவேன். எனது நிர்வாகம் அமெரிக்காவைப் போலவே இருக்கும். அமெரிக்க இஸ்லாமியர்கள் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றுவார்கள். அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் மீதான தடையை நீக்குவேன் என்று கூறியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post