முழு நாட்டையும் முடக்கவும் - ரணில் எச்சரிக்கை

முழு நாட்டையும் முடக்கவும் - ரணில் எச்சரிக்கை


குறைந்தது இரு வார காலமேனும் நாட்டை முழு அளவில் முடக்காது கொரோனா வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த இயலாது. தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் அரசு இதைவிட அவதானமாக இருந்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


$ads={2}

மலையகத்துக்குத் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்புகுத் திரும்பிய நிலையில் நேற்று கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"பி.சி.ஆர். பரிசோதனைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால், நோயாளிகள் இல்லை என முழு அளவில் பரிசோதனைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.

குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் மாத்திரம் சந்தேகத்துக்கிடமான நோயாளிகளுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை பாரியளவில் மோசமடைந்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் சுகாதார அமைச்சு இதனை விட அவதானமாக இருந்திருக்க வேண்டும்.

இனி நாட்டை முழு அளவில் முடக்காது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இயலாது. குறைந்தது இரு வார காலமேனும் நாட்டை முழு அளவில் முடக்க வேண்டும். இல்லையேல் நாடு ஆபத்தை எதிர்கொள்ளும் என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post