ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் புதிய திட்டம் கவனத்தில்!

ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் புதிய திட்டம் கவனத்தில்!

ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வீடுகளுக்கு சென்று கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் நிலைமைகளை கருத்திற் கொண்டு அத்தியாவசிய சேவைகளை காத்திரமான முறையில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


$ads={2}

மிகவும் நெருக்கடியான நிலைமைகளிலும் மின்சாரம், நீர், எரிபொருள், சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை இடையறாது வழங்குவதற்கான திட்டங்களை வகுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டின் சிரேஸ்ட பிரஜைகளை பாதுகாப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென பசில் ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஓய்வூதியத்தை வீடுகளுக்குச் சென்று கொடுக்கக்கூடிய ஓர் முறைமை குறித்து கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அதற்கான திட்டமொன்றை வகுக்குமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post