பண்டாரவளையில் ஞாயிறு சந்தை மறுஅறிவித்தல் வரும்வரையில் பூட்டு!

பண்டாரவளையில் ஞாயிறு சந்தை மறுஅறிவித்தல் வரும்வரையில் பூட்டு!


பண்டாரவளையில் ஞாயிறு சந்தை மறு அறிவித்தல் வரையில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


பண்டாரவளை மக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழமையாக வாரம் தோறும் நடைபெறும் ஞாயிறு சந்தை விற்பனைகளை மறுஅறிவித்தல் வரையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை நகரபிதா ஜனக நிசாந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


$ads={2}


வெல்லவாய, ஹப்புத்தளை மற்றும் வெலிமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான வர்த்தகர்கள் பண்டாவரளை ஞாயிறு சந்தைக்கு பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பெரும் எண்ணிக்கையிலான நுகர்வோரும் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தைக்கு வருகை தருவதனால் சந்தை செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post