சஹ்ரானை கைது செய்யுமாறு உத்தரவிட்டேன்! முன்னால் ஜனாதிபதி சாட்சியம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஹ்ரானை கைது செய்யுமாறு உத்தரவிட்டேன்! முன்னால் ஜனாதிபதி சாட்சியம்!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யுமாறு தான் உத்தரவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உரிய அதிகாரிகள் தங்கள் பணிகள் குறித்து அலட்சியமாகயிருந்தமையே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனது நிர்வாகத்தின் போது முப்படைதளபதிகள் உட்பட உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு நாட்டிற்கான பாதுகாப்பு கொள்கையை உருவாக்கினேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தத்தின் மூலம் தேசிய நல்லிணக்க அமைச்சு என தெரிவித்துள்ள அவர் தேசிய பாதுகாப்பினை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்ததன் மூலம் அதனை தன்னால் உறுதி செய்ய முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

எனது பதவிக்காலத்தின் முதல் ஆறு மாதங்கள் மாத்திரமே பிரதமரும் அமைச்சரவையும் எனக்கு ஆதரவளித்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரினதும் அமைச்சரவையினதும் முழுமையான ஆதரவு கிடைக்காமை காரணமாக பல பின்னடைவுகள் ஏற்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

$ads={2}

அரச சார்பற்ற அமைப்புகளின் தேவையற்ற தலையீடுகள் நாட்டில் பிரச்சினையை உருவாக்கி இனமுறுகலுக்கு வழிவகுத்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 16ஆம் திகதி என்னுடன் விமான நிலையத்துக்கு வந்த பொலிஸ் மா அதிபர் தாக்குதலொன்று இடம்பெறலாம் என எனக்கு தெரிவிக்கவில்லை, ஏப்ரல் 14ஆம் திகதி புதுவருட கொண்டாட்டங்களுக்காக எனது வீட்டிற்கு வந்தவேளை அவரோ பாதுகாப்பு தளபதியோ இது குறித்து தெரிவிக்கவில்லை என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

எனது நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற சம்பவத்தினால் நான் அதிர்ச்சியடைந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.