அபாய வலயங்களில் ஊரடங்கு? இராணுவத் தளபதி வெளியிட்ட அறிக்கை!

அபாய வலயங்களில் ஊரடங்கு? இராணுவத் தளபதி வெளியிட்ட அறிக்கை!

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்று ஏற்பட்டமைக்கான மூலம் குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன. தொற்றாளர்களின் தொடர்புகள் தொடர்பில் ஆராய்ந்ததன் அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து வந்த நபர்களால் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்றவாறான தகவல்களும் கிடைத்துள்ளன. ஆனால் இது தான் மூலம் என்று இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சில பிரதேசங்களில் மிகக் குறைந்தளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் கூட அந்த பிரதேசங்களில் அவதான நிலைமை இல்லை என்று கூற முடியாது. பாரதூரமான அபாயமுடைய பிரதேசங்கள் இனங்காணப்பட்டால் நிச்சயம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.

$ads={2}

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நேற்று மினுவாங்கொட, கம்பஹா, கட்டுநாயக்க, சேனபுர, வத்தளை, கந்தானை, கிரிந்திவெல மற்றும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவற்றில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்தே பெருமளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

எனவே ஊரடங்கை தளர்வுபடுத்தினால் இதுவரையில் தொற்றுக்குள்ளாகாதவர் கூட தொற்றுக்கு உள்ளாகக் கூடும். அதன் காரணமாகவே இடைவெளியுடன் மருந்தககங்கள் விற்பனை நிலையங்கள் என்பன திறக்கப்படுகின்றன.

வார இறுதி நாட்களில் ஊரடங்கு சட்டத்தை விஸ்தரிப்பதற்கான எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. அத்தியாவசிய காரணிகள் இருந்தால் மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்று ஏற்பட்டமைக்கான மூலம் குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன. தொற்றாளர்களின் தொடர்புகள் தொடர்பில் ஆராய்ந்ததன் அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து வந்த நபர்களால் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்றவாறான தகவல்களும் கிடைத்துள்ளன. ஆனால் இது தான் மூலம் என்று இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. எதிர்வரும் நாட்களில் எவ்வாறேனும் மூலத்தை இனங்கண்டு அறிவிப்போம்.

மினுவாங்கொடை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அந்த பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்தளவானோரே கொழும்பில் இனங்காணப்படுகின்றனர். எனவே கொழும்பு அவதான மட்டத்தில் உள்ளது என கூறப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானதாகும். ஆனால் கொழும்பு மாத்திரமல்ல. அனைத்து பிரதேசங்களிலும் ஏதேனுமொரு வகையில் அபாயம் காணப்படுகிறது. ஏதேனுமொரு பிரதேசத்தில் தொற்றாளர் ஒரு மாத்திரம் இனங்காணப்பட்டாலும் அங்குள்ளவர்கள் அச்சுறுத்தல் இல்லை என்று கூற முடியாது.

ஆனால் அந்த அபாயம் பாரதூரமானதாக இருந்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தால் நிச்சயமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். மிகுந்த அவதானமுடைய பிரதேசங்களிலேயே ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்றார். 


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post