மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுவிக்க கையொப்பமிட்ட மனோ!

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுவிக்க கையொப்பமிட்ட மனோ!


மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுவிக்கும் மனுவில் தான் கையொப்பமிட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 2016 செப்டம்பர் 8 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அரச தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தீர்மானித்திருந்த குறித்த மனுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

$ads={2}

ஒக்டோபர் 20ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட இந்த மனு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் செல்லும் போது, துமிந்த சில்வாவின் விடுதலையானது உறுதிப்படுத்தப்படும் என்றும் ஆங்கில ஊடகம் கடந்த வாரம் அறிக்கையிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள மனோ கணேசன், துமிந்த சில்வாவை போன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை சிறையில் செலவிட்டுள்ளதாக கூறினார்.

ஆகவே அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுடன் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இருப்பினும், இதுபோன்ற மனுவில் தாங்கள் கையெழுத்திடவில்லை என அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கெஹெலிய ரம்புக்வெல, மஹிந்த அமரவீர, விதுர விக்ரமநாயக்க மற்றும் விமலவீர திசாநாயக்க மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post