கம்பஹா கொரோனா நோயாளர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து எடுக்கப்பட்ட 7 தீர்க்கமான முடிவுகள்!

கம்பஹா கொரோனா நோயாளர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து எடுக்கப்பட்ட 7 தீர்க்கமான முடிவுகள்!

$ads={2}

  • இலங்கையில் அனைத்து பாடசாலைகளிம் மீள் அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும்: கல்வி அமைச்சு
  • கம்பாஹா மாவட்டத்தில் மேலதிக வகுப்புகள் நாளை முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படும்: கல்வி அமைச்சகம்
  • மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதிகளில் உள்ள முத்தரப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் மீள் அறிவிப்பு வரும்வரை பணிக்கு அறிக்கை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் : இராணுவ தளபதி
  • நாடளாவிய ரீதியில் உள்ள சகல முன்பள்ளிகளுக்கும் நாளையும் (05) முதல் விடுமுறை வழங்குவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. 
  • நய்வல உயர் தொழில்நுட்ப நிறுவனம், களனி பல்கலைக்கழகம், யக்கலை விக்ரமராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனம் ஆகியவை நாளைமுதல் மூடப்படும். மாணவர்கள் உடனடியாக விடுதிகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது - பல்கலைகழகங்கள் மானியங்கள்ஆணைக்குழு
  • மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மீள் அறிவிப்பு வரும் வரை தடை: சிறைச்சாலைகள் ஆணையம்
  • கட்டுநாயக்க விமான நிலைய வெளியாட்கள் டியூட்டி ப்ரீ (Duty Free) வளாகத்திற்குள் நுழைவது இடை நிறுத்தம். புறப்படுகை(Departure) மற்றும் வருகை (Arrival) முனையங்களை மூடுவது குறித்த முடிவு நாளை எடுக்கப்பட உள்ளது. 
  • கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு பகுதிகளில் வசிக்கும் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் மேலதிக அறிவிப்பு வரும் வரைபணிக்கு அறிக்கை செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post