ஊரடங்கு அறிவிப்பின் பின்னர் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறிய 460 பேர் தனிமைப்படுத்தல்!

ஊரடங்கு அறிவிப்பின் பின்னர் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறிய 460 பேர் தனிமைப்படுத்தல்!


தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மேல்மாகாணத்தில் இருந்து ஹட்டன், மாத்தறை, மட்டக்களப்பு, அம்பாறை, தங்காலை, யாழ்ப்பாணம்,நுவரேலியா நோக்கி சென்ற 460 பேர் பொது சுகாதார பரிசோதகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.


$ads={2}


வெள்ளவத்தை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் சேவையாற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேல்மாகாணத்தில் இருந்துஅவ்வப்பகுதி நோக்கி சென்றவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், குறித்த நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.