MT New Diamond கப்பல் தொடர்பாக இந்திய கடலோர பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

MT New Diamond கப்பல் தொடர்பாக இந்திய கடலோர பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தி!

கிழக்கு கடற்பரப்பில் தீப்பற்றிய MT New Diamond எனும் கப்பல் கடல்பரப்பின் 40 மைல் தூரத்திற்கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அதனை கண்காணிப்பதற்காக 11 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இப்பணியில் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான Ameya என்ற கப்பலும் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

MT New Diamond கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் அதில் உள்ள எண்ணெய் கடலில் கலப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இந்திய கடலோர பாதுகாப்பு படை அதன் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

2 லட்சத்து 70 ஆயிரம் டன் மசகு எண்ணெயுடன் பயணித்த குறித்த MT New Diamond கப்பல், நேற்று முன்தினம் காலை தீப்பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.