ரத்மலானை விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசு நடவடிக்கை !!!

ரத்மலானை விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசு நடவடிக்கை !!!


ரத்மலானை விமான நிலையத்தை மாலத்தீவு மற்றும் தென் இந்தியாவின் உள்ள சில இடங்களுக்கான விமான நடவடிக்கைகளுக்குபயன்படுத்த சுற்றுலா அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

1935 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட ரத்மலானை விமான நிலையம் இலங்கையின் முதல் சர்வதேச விமான நிலையமாகும். இதுதற்போது உள் நாட்டு விமான சேவைகளுக்கும், தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் வணிக விமானங்களுக்காக இயங்கி வருகன்றது. மேலும் விமானி பயிற்ச்சிக்காகவும், விமானப்படை தளமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது பல உள்ளூர் விமானங்கள் விமான நிலையத்தில் தினசரி இயக்கப்படுவதோடு, சர்வதேச விமான நடவடிக்கைகளுக்குஅமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார்.

விமான நிலையத்தைப் பயன்படுத்தும் விமானங்களுக்கு சலுகை எரிபொருள் நிரப்பும் கட்டணங்களுக்கும், மேலும் பலசலுகைகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

விமான நடவடிக்கைகளுக்காக மோல்டிவியன் எயார் மற்றும் வில்லா எயார் ஆகிய விமான நிறுவங்களுடன் கலந்துரையாடல்மெற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரணதுங்க கூறினார்.

9,000 க்கும் மேற்பட்ட மாலத்தீவு நாட்டவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ரத்மலனாவைச் சுற்றியுள்ளபகுதிகளில் வாழ்கின்றனர். இந்தியாவின் தென்னிந்தியாவிலிருந்து வருகை தரும் பலர் ரத்மலானை அருகே பம்பலபிட்டி மற்றும்கொல்லுப்பிடி போன்ற இடங்களில் தங்கியுள்ளனர். விமான நிலையம் இந்த பயணிகளை குறிவைக்கும்” எனவும் தெரிவுத்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post