க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவித்தல் வெளியானது!!

க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவித்தல் வெளியானது!!


க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.


இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.


இதேவேளை 2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டொபர் மாதம் 11 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதிக்குள் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைந்துள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, மாகாண கல்வி பணிப்பாளர்கள் வலையகல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் உள்ளிட்டோருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கு அமைவாக கல்வி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மகாண சுகாதார சேவைப்பணிப்பாளர் மற்றும் மாவட்ட சுகாதார சேவைப்பணிப்பாளர்கள் ஆகியோரை இணைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலையக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களினால் பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post