கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் மர்மமான முறையில் நிகழும் நில அதிர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் மர்மமான முறையில் நிகழும் நில அதிர்வு!

கண்டி நகரை அண்மித்துள்ள திகன, அநுரகம, ஹரகம, சிங்ஹாரகம, மயிலபிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் சில நாட்களாக பாரிய சத்தத்துடன் நில அதிர்வுகள் பதிவாகி வருவதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்த விடயத்தை புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராய்ச்சி பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த 29ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் முதல் தடவையாக பாரிய சத்தத்துடன் நில அதிர்வொன்று பதிவாகியிருந்தது.

இந்த நில அதிர்வினால் குறித்த பகுதிகளிலுள்ள பல வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

எனினும், இது நில அதிர்வொன்று என கூறிய புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டி. சச்சன டி சில்வா, இது நிலநடுக்கம் கிடையாது என குறிப்பிட்டார்.

குறிப்பாக இயற்கையாக ஏற்பட்ட நிலஅதிர்வாக இதனை கருத முடியாது எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நில நடுக்கத்தை பதிவு செய்யும் கருவியில் அதிர்வுகள் ஏற்பட்டமைக்கான பதிவுகள் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, நிலஅதிர்வு பதிவான கண்டி பகுதிக்கு புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகத்தின் விசேட குழுவொன்று ஆய்வுகளுக்காக சென்றுள்ளது.

சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையத்தின் புவிசரிதவியல் பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி நில்மினி தல்தெனவின் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த குழுவினர் இதுவரை நடத்திய விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் ஊடாக குறித்த நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டி. சச்சன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில், முதல் அதிர்வு பதிவாகி 4 நாட்களின் பின்னர் இன்று (02) காலை 7.10 அளவில் மீண்டும் ஒரு நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை பாரிய சத்தமொன்றை அடுத்து நில அதிர்வொன்று பதிவானதாக அந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டி.சச்சன டி சில்வா, நிலநடுக்கம் பதிவாகும் கருவியில் நில அதிர்வொன்று ஏற்பட்டமைக்கான பதிவுகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனினும், இந்த நில அதிர்வு ஏற்படுவதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக விசாரணைகள் மற்றும் ஆய்வுகளை செய்து வருவதாகவும் புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டி.சச்சன டி சில்வா தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.