ரணில், சுமந்திரன், அனுர மற்றும் மேலும் சிலர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

ரணில், சுமந்திரன், அனுர மற்றும் மேலும் சிலர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (19) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.


குறித்த ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமைய இன்று (19) முற்பகல் 10 மணியவில் அவர்கள் அங்கு முன்னிலையாகினர்.


இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.


திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானதாக குறிப்பிடப்படுகிறது.


இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.


சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post