
அதன்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதியிலிருந்து விண்வெளி நிலையம் தனது பயணத்தைத் தொடங்கி, வடகிழக்கு நோக்கி நகர்ந்து இலங்கையை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை நேரப்படி மாலை 6.42 மணி முதல் மாலை 6.48 மணி வரை இலங்கைக்குத் தெரியும் என்று நாசா தெரிவித்தது.
மேலும், வானம் இருண்ட மேகங்கள் இல்லாதிருந்தால், சர்வதேச விண்வெளி நிலையம் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் மாலை 6.44 மணியளவில் நிர்வாணக் கண்ணுக்குத் தெரியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.