மது போதையில் கலாட்டா; இரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மத்தேகொடை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் மது போதையில் முறையற்று நடந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் பொலிஸ் விடுதியில் நேற்றிரவு முறையற்று நடந்து கொண்டதாகவும், முறைப்பாட்டைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தேகொடவிலுள்ள ஹோட்டலொன்றில் அவர்கள் இருவரும் மதுபானம் அருந்திவிட்டு, போதையில்
முறைகேடாக நடந்துகொண்டுள்ளனர்.

குறித்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் பணி இடைநீக்கம் செய்வதற்கான விசாரணைகள், கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் கல்கிசை உதவி பொலிஸ் அத்தியட்சகரினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post