வாகனங்களை வாங்குவோர் கவனத்திற்கு!

வாகனங்களை வாங்குவோர் கவனத்திற்கு!


வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான சமீபத்திய முடிவின் காரணமாக, பாவித்த வாகனங்களை வாங்கும் நிலை அதிகரித்துள்ளது.

இந்த நிலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பாவித்த வாகனங்களின் சந்தையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, வாகன இறக்குமதி தற்காலிக நடவடிக்கை, நிரந்தர நடவடிக்கை அல்ல. பணப்புழக்கத்தை உறுதிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது என்பதால், தற்போதைய நிலைமையை மனதில் வைத்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறு வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

வாகன இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியதைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு திருப்திகரமான அளவில் உள்ளது என்று அமைச்சர் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் வாகன இறக்குமதி தடை தளர்த்தப்படும் என்றார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post