குழவிகள் கொட்டி மூன்று வயது குழந்தை பலி!


வவுனியா – ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள காணியில் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது அப்பகுதியில் மரம் ஒன்றில் இருந்த குளவிகள் தாக்கியுள்ளள.

இதனால் காயமடைந்த அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

மேலும் மற்றொரு குழந்தை, குழந்தையின் தாய் மற்றும் உறவினர் ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அருள்ராசன் சமிஸ்கா என்ற மூன்று வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post