தேங்காய் விலை நிர்ணயம் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேங்காய் விலை நிர்ணயம் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள அறிவிப்பு!


தேங்காயின் சுற்றளவுக்கு அமைய நிர்ணயிக்கப்பட்டு விலைக்கு தேங்காயினை விற்பனை செய்யாவிடின் எதிர்கலத்தில் சுற்றுவளைப்புக்களை முன்னெடுத்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


அத்துடன் நேற்று மற்றும் இன்றைய தினமும் நாட்டின் அனைத்து மாவட்டங்கங்களிலும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளை பயன்படுத்தி வர்த்தகர்களுடன் நுகர்வோருக்கும் அது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.


அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய 13 அங்குலங்களுக்கு மேல் சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை 70 ரூபாவாகும்.


12 முதல் 13 அங்குல சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவாகும்.


இதேவேளை, 12 அங்குலத்தை விடவும் குறைந்த சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாவாகவும் நிரணயம் செய்யப்பட்டுள்ளது.


ஆகக் கூடுதலான சில்லறை விலைகளுக்கு மேலாக உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வியாபாரி என எவரும் விற்பனை செய்யவோ விற்பனைக்கு விடவோ விற்பனைக்கு வெளிப்படுத்தவோ அலலது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என கட்டளையிடப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.