நாளை முதல் மொபைல் போன் பாவனையாளர்களுக்கு அமுலுக்கு வரும் சட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் மொபைல் போன் பாவனையாளர்களுக்கு அமுலுக்கு வரும் சட்டம்!

நாளை (01) முதல் தொலைத்தொடர்பு  வழங்குனர்களுடன் இணைக்கும் புதிய  மொபைல் தொலைபேசிகள் மற்றும் சாதனங்களை கொள்வனவு செய்யும்போது TRCSL அனுமதி/பதிவு உள்ளதா என  சரிபார்க்கப்பட வேண்டும் என இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய இயக்குநர் ஜெனரல் ஓஷத சேனாநாயக்க, தொலைத்தொடர்பு மொபைல் வழங்குனர்களுடன் ஏற்கனவே இணைக்கப்பட்ட சிம் கார்டுடன் இயக்கப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு மொபைல் தொலைபேசிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றார்.

மொபைல் சாதனங்களை இறக்குமதி செய்யும் அல்லது எடுத்தக்கொண்டு வரும் நபர்கள் TRCSL இன் உத்தியோகபூர்வ இணையதளம் ( http://www.trc.gov.lk ) ஊடாக பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

TRCSL வழங்கிய விற்பனையாளர் உரிமம் வைத்திருக்கும் விற்பனையாளர்களிடமிருந்து சிம் கார்டுடன் இயக்கப்படும் தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை TRCSL அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கருடன் மட்டுமே வழங்க வேண்டும்.

TRCSL அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசிகளை மீண்டும் நாளை முதல் மீண்டும் பதிவு செய்ய வேண்டிக தேவையில்லை ”, என  சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.

TRCSLக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் TRCSL அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கரின் நம்பகத்தன்மையை தங்கள் விற்பனையாளர் மூலம் சரிபார்க்க முடியும்.

send SMS to 1909 after typing IMEI<15 digit IMEI number> to the TRCSL.

சாதனங்கள் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக கதிர்வீச்சை வெளியிடும், புதுப்பிக்கப்பட்ட (போலி) தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டுவருவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.

சிம் மூலம் இயக்கப்படும் பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்கள் எதிர்காலத்தில் செயலிழக்கப்படும், அதே நேரத்தில் TRCSL அத்தகைய உபகரணங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும் என TRCSL  இயக்குநர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.