உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டிய தந்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டிய தந்தை!


காதல் திருமணம் செய்துகொண்டதால் மகள் உயிருடன் இருக்கும்போதே, அவரது தந்தை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டிய சம்பவம் ஒன்று இந்தியா, தமில்நாட்டில் இடம்பெற்றுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டையை சேர்ந்தவர் ஜெயபால் - செல்வி தம்பதியர். இவர்கள் பெங்களூரில் குடும்பத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார்.

மகள் கீர்த்தனாவிற்கு திருமணம் முடித்து வைப்பதற்காக தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்த ஒருவரை மணமகனாக தேர்வு செய்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.


$ads={1}

இதற்காக சொந்த ஊரான தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டி கிராமத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். திருமணத்திற்காக பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு, நகை மற்றும் பொருட்கள் அனைத்தும் வாங்கி வைக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை அன்று திருமணம் நடைபெறுவதாக உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியில் கிளம்பிய கீர்த்தனா வீடு திரும்பவில்லை. வெகுநேரமாக வரவில்லை என தெரிந்த குடும்பத்தார், அவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

அப்போது அவர்களுக்கு தங்களுடைய மகள் வேறு ஒரு பையனுடன் சென்று விட்டார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததன் அடிப்படையில், கீர்த்தனாவையும் கீர்த்தனவை அழைத்துச் சென்றவரையும் அழைத்து பொலிஸார் விசாரித்தபோது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.


$ads={2}

இதனால் ஆத்திரமடைந்த தந்தை ஜெயபால் தனது மகள் இறந்து விட்டதாக கூறி, கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

மகள் உயிருடன் இருக்கும் பொழுதே , தந்தையே கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டி இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.